Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திரு. சொக்கலிங்கம் விநாயகலிங்கம்

தென்புலோலி - மாலிசந்தி - கொழும்பு

Obituary Image

Birth Date: 1955-03-15

Death Date: 2024-03-02

 

 

தென்புலோலியூரைப் பிறப்பிடமாகவும் மாலிசந்தி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் விநாயகலிங்கம் (இளைப்பாறிய வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபை பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் (Public Service Commission) செயலாளர், திறைசேரி (Treasury) அத்தியட்சகர், தேர்தல் உதவி ஆணையாளர், வீடமைப்பு உதவி ஆணையாளர், புத்தளம் உதவி அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை (தீவுப் பகுதி) மற்றும் கற்பிட்டி பிரதேச காரியாதிகாரி [D.R.O]) அவர்கள் கொழும்பில் 2/3/2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான சொக்கலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலம் சென்றவர்களான கந்தவனம், லைலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவியின் அன்புக் கணவரும்,

மேனகா (வைத்திய கலாநிதி கொழும்பு), சிவபரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

ஜெபநேசன் (வைத்திய கலாநிதி கொழும்பு), பிரகலதா (ராதை-கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஷிகா, புஜிதா, ஜஸ்மிதா, ரன்யா ஆகியோரின் அன்பு பேரனும்,

காலம் சென்றவர்களான லிங்கேஸ்வரி, லிங்கநாயகி, தெய்வேந்திரலிங்கம் லிங்கராணி மற்றும் அரியலிங்கம் (இளைப்பாறிய அதிபர்), கிருஷ்ணலிங்கம் (ஒலிபரப்பாளர்-கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்

காலம் சென்றவர்களான தில்லையம்பலம் (ஆசிரியர் ஹாட்லி கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன்), சிவானந்தம் கருணாநந்தம், மற்றும் பரமேஸ்வரி, கலைச்செல்வி மற்றும் காலம் சென்றவர்களான ராஜகுலசிங்கம் (வைத்திய கலாநிதி-California) தர்மகுலசிங்கம் மற்றும் தர்மதேவி, மகேஸ்வரிதேவி, கமலாதேவி, பற்குணதேவி(சந்திரா), செல்வலிங்கம், ஜெயகுலசிங்கம்ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

இறுதிச்சடங்குகள் பற்றிய விபரங்கள்:

Viewing:

Tuesday, 5 March 2024

9 AM - 9 PM

Mahinda Florist, 291 Galle Rd, Dehiwala - Mt. Lavinia

Cremation:

Wednesday, 6 March 2024

10 AM

Mt Lavinia Cemetery

தொடர்புகளுக்கு:

மேனகா - +94 112 716 834

சிவபரன் - +1 905 239 8994