நறுவிலடி, புலோலி - திருக்கோணமலை
18 September 1940 – 17 October 2026
யாழ்ப்பாணம், புலோலி, நறுவிலடியைப் பிறப்பிடமாகவும், திருக்கோணமலையை
வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி இராசமணி பாலசுப்பிரமணியம் அவர்கள்
17.10.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை – தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை பாலசுப்பிரமணியன் (ஓய்வுபெற்ற பிரதிக் கணக்காய்வாளர்
நாயகம், கொழும்பு மற்றும் பிரதம கணக்காய்வாளர் வடமாகாண சபை) அவர்களின்
அன்பு மனைவியும் ஆவார்.
அன்னார் திருமதி சுதேசன் மலர்விழி (ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்,
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கிழக்கு மாகாணம்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
Eng நவளேந்திரராஜா சுதேசன் (மேலதிகப் பொதுமுகாமையாளர், தேசிய நீர்வழங்கல்
மற்றும் வடிகாலமைப்புச் சபை) அவர்களின் அன்பு மாமியாரும்
Eng. S. சுபாஷ்கன், (பொறியியலாளர் புகையிரதத் திணைக்களம், இரத்தமலை),
S. ஹேஷன் (மாணவன் SLIIT-Malabe) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திருமதி S. ஜனோசிகா (Pharmarist, கல்லுணை ஆதார வைத்தியசாலை) அவர்களின்
அன்புப் பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 18.10.2026 அன்று அவரது இல்லத்திலிருந்து பிற்பகல் 4.00 மணியளவில்
இந்துமயானத்திற்குக் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு தகனக்கிரியைகள் நடைபெறும் என்பதை
உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
இவ்வண்ணம்,
(குடும்பத்தினர்.)
தொ.இல - 0772442049
Share a memory, a prayer, or a few words of comfort for the family.